3 நாட்களாக இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த சிறுமியை கண்டுபிடித்த மீட்பு நாய்க்கு விருது
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியேவில் 6 வயது சிறுமியை மோப்பம் பிடித்த மீட்பு நாய்க்கு விருது வழங்கப்பட்டது.
மீட்பு நாய்க்கு விருது
பிப்ரவரியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியேவில் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மோப்பம் பிடித்து மீட்புப் பணியாளர்களுக்கு உதவியதற்காக NDRF -ன் நாய்க்குட்டியான ஆறு வயது ஜூலிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6 அன்று துருக்கியே மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரணம் வழங்குவதற்காக 'ஆபரேஷன் தோஸ்த்' திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவில் பெண் லாப்ரடோர் நாய் ஒரு பகுதியாக இருந்தது.
NDRF
இந்த நடவடிக்கையின் போது சிறந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டதற்காக ஜூலிக்கு 'Director General's Commendation Roll' வழங்கப்பட்டது.
6 வயது சிறுமி உயிருடன் மீட்பு
பல மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் 70 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த 6 வயது சிறுமி பெரனை (Beren) மோப்பம் பிடித்து அவரை உயிருடன் காப்பாற்ற ஆற்றிய குறிப்பிட்ட பங்கிற்காக ஜூலி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
NDRF
துருக்கியேவின் காசியான்டெப் பகுதியிலிருந்து சிறுமி பெரென் மீட்கப்பட்டார். ஒருவர உயிருடன் புதையுண்டு இருப்பதை ஜூலி முதலில் சுட்டிக்காட்டிய பிறகு, ரோமியோ (மற்றொரு NDRF மீட்பு நாய்), எனும் ஆண் லாப்ரடோர் அதனை உறுதி செய்தது.
கொல்கத்தாவில் உள்ள NDRFன் 2வது பட்டாலியனில் ஜூலி பணியாற்றி வருகிறது.
#Rescuer #Julie,
— NDRF ?? (@NDRFHQ) June 9, 2023
NDRF's life saver rescue canine; awarded with Director General's Commendation Roll for excellent Search & Rescue work during #OpDost in Türkiye.#SavingLivesAndBeyond ??@AtulKarwal @PIBHomeAffairs@PIB_India@ANI pic.twitter.com/KshhgsroS6