26 சமூகவலைத்தளங்களுக்கு தடை விதித்த இந்தியாவின் அண்டை நாடு - என்ன காரணம்?
நேபாள அரசு 26 சமூகவலைத்தளங்களுக்கு தடை விதித்துள்ளது.
சமூகவலைத்தளங்களுக்கு தடை
மெட்டா, கூகிள் போன்ற நிறுவனங்களின் சமூகவலைத்தளங்களை உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் சில நாடுகள் சமூகவலைத்தளங்களை தங்கள் நாட்டில் பதிவு செய்ய வேண்டும், தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை வைத்துள்ளது.
இதே போல், நேபாளமும் தங்கள் நாட்டில் செயல்படும் சமூகவலைத்தளங்களை தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்து, உள்ளூர் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டது.
இது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், 7 நாட்களுக்குள் அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டுமென ஆகஸ்ட் 28 ஆம் திகதி உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று முதல் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்நாப்சேட் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை தடை செய்வதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
இதில், டிக்டாக் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளதாவும், டெலிகிராம் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அரசின் இந்த உத்தரவு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனக்கூறி பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |