மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண் பரிதாப மரணம்
நேபாளத்தில் மாதவிடாய் காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியே தனியாக தங்க வைக்கப்பட்ட இளம் பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
தனியாக தங்கியிருந்த நிலையில்
நேபாளத்தின் Baitadi மாவட்டத்தை சேர்ந்த 16 வயது அனிதா சந்த் என்பவரே, மாதவிடாய் காரணமாக தனியாக தங்கியிருந்த நிலையில், பாம்பு தீண்டி மரணமடைந்தவர்.
@EPA
அவர் தூக்கத்தில் இருந்த போது பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது. chhaupadi எனப்படும் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலால், 2019-க்கு பின்னர் மரணமடையும் முதல் பெண் இவர் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, மாதவிடாய் நாட்களில் பெண்களை தனியாக தங்க வைக்கும் இந்த நடைமுறையை அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பயனளிக்காமல் போகிறது என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
chhaupadi எனப்படும் இந்த நடைமுறையானது நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அசுத்தமாக இருப்பார்கள் என்பதால், அவர்களை தனியாக தங்க வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
7,000 மாதவிடாய் குடிசைகள்
இந்த நிலையில், chhaupadi நடைமுறையை பின்பற்ற கட்டாயப்படுத்துபவர்களுக்கு 3 மாத சிறையும் உள்ளூர் பணத்தில் 20 பவுண்டுகள் அபராதமும் விதித்து, 2005ல் தடை செய்துள்ளனர்.
@reuters
இந்த நிலையில், தற்போது அனிதா சந்த் மரணமடைந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்த பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அனிதா சந்த் மரணமடையும் போது அவர் மாதவிடாய் நாட்களில் இல்லை என்றே குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
2019ல் கடைசியாக chhaupadi நடைமுறையால் பெண் ஒருவர் மரணமடைந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, எதிர்ப்பாளர்கள் திரண்டு 7,000 மாதவிடாய் குடிசைகளை சேதப்படுத்தினர்.
ஆனால் அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று பரவ, கவனம் அதன் பின்னால் சென்றது எனவும், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் மாதவிடாய் குடிசைகள் புதிதாக கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |