72 பேர்கள் பலியான நேபாள விமான விபத்திற்கு காரணம் இது தான்: வெளியான ஆய்வறிக்கை
இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட 72 பேர் மரணமடைந்த நேபாள விமான விபத்திற்கான காரணம், அதன் விமானிகள் செய்த தவறு என அரசாங்கம் முன்னெடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மின்சாரத்தை துண்டித்ததன் விளைவாக
தொடர்புடைய விமானத்தின் விமானிகள் தவறுதலாக மின்சாரத்தை துண்டித்ததன் விளைவாக விபத்து நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
@reuters
எட்டி ஏர்லைன்ஸ் விமானமனது தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காராவுக்கு ஜனவரி 15ம் திகதி புறப்பட்டுள்ளது.
அதன் விமானிகளுக்கு அந்த நாளின் மூன்றாவது பயணம் எனவும், புறப்பட்ட விமானம் சுமார் 1.5 கி.மீ தொலைவில் விபத்தில் சிக்கியது. கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.
விபத்தினை அடுத்து மீட்பு நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விமானம் புறப்பட்டு 49 நொடிகளில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தவறை உடனடியாக அடையாளம் காணவும்
விமானிகள் flap lever-ஐ பயன்படுத்துவதற்கு பதிலாக, மின்சாரத்தை கட்டுப்படுத்தும் condition lever-ஐ தவறுதலாக பயன்படுத்தியதாகவே தெரியவந்துள்ளது.
@reuters
மட்டுமின்றி, தங்கள் தவறை உடனடியாக அடையாளம் காணவும் அவர்கள் தவறியதாகவே கூறப்படுகிறது. மேலும், போதுமான பயிற்சி அளிக்கப்படவில்லை, அதிக வேலைப் பளு உள்ளிட்டவையும் விபத்துக்கு காரணமாக பட்டியலிட்டுள்ளனர்.
விமானத்தில் எவ்வித தொழில்நுட்ப கோளாறும் இருக்கவில்லை என்றும், இது முழுக்க விமானிகளின் தவறால் ஏற்பட்ட விபத்து என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |