புடாபெஸ்டுக்கு விஜயம் செய்த நெதன்யாகு... ஐ.சி.சி-யிலிருந்து வெளியேறும் ஹங்கேரி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுமுறை பயணமாக ஹங்கேரி சென்றுள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடுகளில் இருந்து விலக இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
ஹங்கேரி வெளியேறுவதாக
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடுகளில் இருந்து ஹங்கேரி வெளியேறுவதாக பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமை அதிகாரி ஜெர்கெலி குலியாஸ் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்ட கட்டமைப்பின்படி, வியாழக்கிழமை ஹங்கேரி அரசாங்கம் வெளியேறும் நடைமுறையைத் தொடங்கும் என்றே குலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நவம்பர் மாதம் முதல் சர்வதேச கைதாணையின் கீழ் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார். இந்த நிலையில் அவர் அரசு முறை பயணமாக ஹங்கேரி சென்றுள்ளதை அடுத்தே, ஐ.சி.சி-யிலிருந்து வெளியேறுவதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களும் உறுப்பு நாடுகளாகக்கொண்ட ஐ.சி.சி-யிலிருந்து ஹங்கேரி வெளியேறும் முடிவானது நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றும் அவசிய ஏற்பட்டுள்ளது.
வெளியேறும் நடவடிக்கைகள் ஓராண்டு காலம் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டதன் அடுத்த நாளே, ஹங்கேரிக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் விக்டர் ஓர்பன் முன்வைத்திருந்தார்.
மேலும், ஒரு நாட்டின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தலைவருக்கு எதிராக கைதாணை பிறப்பித்ததன் மூலம் குற்றவியல் நீதிமன்றம் அதன் சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டதாகவும் நெதன்யாகுவின் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
வலுவான ஆதரவாளராக
1999ல் ஐ.சி.சி ஒப்பந்தத்தில் இணைந்த ஹங்கேரி, 2001ல் விக்டர் ஓர்பன் ஆட்சியின் போதே உறுதி செய்தது. இதனால் குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணைக்கு உட்பட்ட எவரையும் தடுத்து வைத்து நாடு கடத்த வேண்டும்.
ஆனால் இந்தச் சட்டம் ஒருபோதும் பிறப்பிக்கப்படவில்லை என்று புடாபெஸ்ட் வாதிட்டுள்ளது. மேலும், ஐ.சி.சி விதிகள் ஹங்கேரியில் செல்லுபடி ஆகாது என்றே விக்டர் ஓர்பன் குறிப்பிட்டிருந்தார்.
ஓர்பன் பல ஆண்டுகளாக நெதன்யாகுவின் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார், இஸ்ரேலின் வலதுசாரி பிரதமரை அதே தேசியவாத மற்றும் இறையாண்மைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கூட்டாளியாக ஏற்றுக்கொள்கிறார்.
மட்டுமின்றி, இஸ்ரேலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய அறிக்கைகள் அல்லது தடைகளை ஹங்கேரி அடிக்கடி தடுத்தும் வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |