பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது! அங்கீகரித்த பின் பகிரங்கமாக எச்சரித்த நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீனம் இருக்காது என எச்சரித்துள்ளார்.
அங்கீகார அறிவிப்பு
பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.
ஐ.நா.பொதுச்சபை உச்சி மாநாட்டில் பல ஐரோப்பிய நாடுகள் இதனை தெரிவித்தன. அதேபோல் அவுஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸும் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
நெதன்யாகு எச்சரிக்கை
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) "பாலஸ்தீனம் எனும் நாடே இருக்காது" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் அளிக்கப்படும். அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்கள், பயங்கரவாதத்திற்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், அது நடக்கப்போவது இல்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது. பல ஆண்டுகளாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தத்திற்கு இடையில், பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |