கடற்கரையில் இனி காதல் உறவு வைத்துக் கொள்ள தடை: பிரபல நாடு அறிவித்துள்ள அதிரடி உத்தரவு
நெதர்லாந்தின் வீரே நாட்டில் உள்ள கடற்கரையில் காதலர்கள் உடலுறவு கொள்ள தடை விதிப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உடலுறவு வைத்து கொள்ள தடை
நெதர்லாந்தின் வீரே நாட்டில் உள்ள கடற்கரையில் எல்லை மீறும் காதல் ஜோடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்கரையில் உடலுறவு செய்வது தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடற்கரையில் காதல் செய்யும் இளம் ஜோடிகள் தனிமைகள் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட தொடங்கின்றனர், இதனால் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பெரும் அசெளகரியத்தை உணர்கின்றனர்.
மேலும் இந்த கடற்கரையின் அருகில் உள்ள குன்று பகுதி ஒன்றிலும் காதலர்கள் அத்துமீறிய செயலில் ஈடுபட தொடங்கின்றனர்.
இந்நிலையில் இளம் ஜோடிகளின் எல்லையற்ற அத்துமீறல் தொடர்பான புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, நெதர்லாந்து அரசாங்கம் கடற்கரை மற்றும் அதற்கு அருகில் உள்ள குன்றில் உடலுறவு வைத்து கொள்வது தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் கடற்கரையை சுற்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருப்பதுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அத்துமீறும் இளம் ஜோடிகளுக்கு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பாத் பிரியர்கள் பாதிப்பு
நெதர்லாந்து அரசின் இந்த திடீர் தடை உத்தரவால் கடற்கரையில் சன் பாத் எடுக்கும் பிரியர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.
மேலும் கடற்கரையில் தகாத உறவு வைத்து கொள்ளும் நபர்களுக்கும் எங்களுக்கும் எத்தைய தொடர்பும் இல்லை என்றும், சன் பாத் எடுப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என தெரிவித்துள்ளனர்.