நெதர்லாந்தின் விசா வகைகள் மற்றும் அதற்கு விண்ணப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
நெதர்லாந்து அதன் காற்றாலைகள், பூந்தோட்டங்கள் மற்றும் கால்வாய்களுக்கு மிகவும் பெயர் பெற்ற ஒரு அற்புதமான நாடு.
நெதர்லாந்து பல்வேறு பயண நோக்கங்களுக்காக பல வகையிலான விசாக்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் நெதர்லாந்து பயணத்திற்கு திட்டமிடுவதற்கு முன்னதாக அதன் விசா வகைகள் மற்றும் விண்ணப்ப செயல்முறைகளை புரிந்து கொள்வது மிகவும் அவசியமாக அமைகிறது.
நெதர்லாந்து விசா வகைகள்
- விமான நிலைய போக்குவரத்து விசா(Airport transit visa)
- குறுகிய கால ஷெங்கன் விசா(Short-stay Schengen visa)
- ஆரஞ்சு கம்பள விசா வசதி(Orange Carpet Visa Facility)
- ஷெங்கன் விசா(Schengen visa facilitation)
- நீண்ட கால தங்கல் விசா(Long-stay visa (MVV)
- நுழைவு விசா(Entry visa)
- கரீபியன் விசா(Caribbean visas)
விமான நிலைய போக்குவரத்து விசா(Airport transit visa)
விமான நிலைய போக்குவரத்து விசா என்பது நெதர்லாந்தில் உள்ள விமான நிலையத்தில் குறுகிய இடைநிறுத்தம் செய்ய அல்லது விமானத்தை மாற்ற அனுமதிக்கும் தற்காலிக ஆவணம் இது.
நாட்டில் இணைப்பு விமானங்கள் உள்ள பயணிகளுக்கு இது வழங்கப்படுகிறது.
இந்த ஆவணம் உங்களுக்கு நெதர்லாந்தில் நுழைய அல்லது இடம்பெயர்வு கட்டுப்பாட்டை(passport control) கடந்து செல்ல அனுமதி வழங்காது.
விண்ணப்ப காலம்: நெதர்லாந்திற்குள் உங்களது திட்டமிட்ட பயணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக அல்லது 45 நாட்களுக்கு முன்னதாக உங்கள் விமான நிலைய போக்குவரத்து விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறுகிய கால ஷெங்கன் விசா(Short-stay Schengen visa)
நெதர்லாந்து அல்லது பிற ஷெங்கன் நாடுகளுக்கு செல்ல பயணம் செய்ய திட்டம் இருந்தால் இந்த குறுகிய கால ஷெங்கன் விசா உங்களுக்கு 180 முதல் 90 நாட்கள் வரை தங்குவதற்கான அனுமதியை வழங்குகிறது.
இது விடுமுறை சுற்றுலா, வணிக பயணங்கள் மற்றும் குடும்பங்கள், நண்பர்களை சந்திக்க பொருத்தமானது.
விண்ணப்ப காலம்: இந்த குறுகிய கால ஷெங்கன் விசாகளை உங்களின் பயணத்திற்கு 6 மாதங்கள் முதல் 45 நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த ஷெங்கன் விசா உங்களிடம் இருந்தால் வரையறுக்கப்பட்ட தங்கல் காலத்திற்குள் உங்களால் அனைத்து ஷெங்கன் நாடுகளுக்கும் சுதந்திரமான பயணம் மேற்கொள்ள முடியும்.
ஆரஞ்சு கம்பள விசா வசதி(Orange Carpet Visa Facility)
வணிக நோக்கங்களுக்கான நீங்கள் அடிக்கடி நெதர்லாந்து செல்பவர் என்றால் இந்த ஆரஞ்சு கம்பள விசா வசதி உங்களுக்கானது.
ஆரஞ்சு கம்பள விசா வசதி உங்கள் விசா விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்தும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் வியாபார பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, ஷெங்கன் விசா விண்ணப்பங்களுக்கான தேவையான ஆவணங்களை குறைக்கிறது.
இந்த ஆரஞ்சு கம்பள விசா வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெங்கன் விசா(Schengen visa facilitation)
இது நெதர்லாந்து மற்றும் ஷெங்கன் நாடுகளில் 90 முதல் 180 நாட்களுக்குள் தங்குவதற்கான அனுமதியை வழங்குகிறது.
ஆனால் இந்த ஷெங்கன் விசாவை பெறுவதற்கு நீங்கள் EU, EEA அல்லது சுவிஸ் நாட்டு குடிமகனின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த ஷெங்கன் விசா மேல் குறிப்பிட்டுள்ள பிரிவினருக்கு மட்டுமே செல்லுபடியாகும்…
நீங்கள் ஷெங்கன் விசா பெறுவதற்கு தகுதியானவர் என்றால் உங்கள் விசா நடைமுறை எளிமையாவதுடன், நீங்கள் Schengen விசா வசதியைப் பெறும்போது நீங்கள் விசா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் சில நேரங்களில் மட்டும் சேவை கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கலாம்.
நீண்ட கால தங்கல் விசா(Long-stay visa) (MVV)
இந்த நீண்ட கால தங்கல் விசா உங்களை 90 நாட்களுக்கு மேல் நெதர்லாந்தில் தங்க அனுமதிக்கிறது.
மேலும் இது நீண்ட கால தற்காலிக தங்குவதற்கான அங்கீகாரம்(MVV) என்றும் அழைக்கப்படுகிறது.
நுழைவு விசா(Entry visa)
நெதர்லாந்து குடிமக்கள் வெளிநாட்டில் இருக்கும் போது தங்களுடைய இருப்பிட அனுமதியை (Dutch residence permit)இழந்தோ, திருடப்பட்டோ அல்லது காலாவதியாகி இருந்தாலோ மீண்டும் நெதர்லாந்துக்குள் நுழைய இந்த நுழைவு விசாவை பெற வேண்டும்.
இந்த வசதி மூலம் நெதர்லாந்து அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது ஆவணங்களை விரைவாக பெற வழிவகை செய்கிறது.
மேலும் இது அவர்களது நாட்டிற்குள் நுழைவை எளிதாக்குகிறது.
கரீபியன் விசா(Caribbean visas)
இந்த கரீபியன் விசா மூலம் நெதர்லாந்து இராச்சியத்தின் கரீபியன் பகுதிகளுக்கு உங்களால் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஆனால் இந்த கரீபியன் விசா மூலம் நெதர்லாந்து இராச்சியத்தின் ஐரோப்பிய பகுதிகளுக்குள் நுழைய முடியாது.
கரீபியன் விசா மூலம் Aruba, Bonaire, Curaçao, Saba, St Eustatius மற்றும் St Maarten ஆகிய நெதர்லாந்து இராச்சியத்தின் கரீபியன் பகுதிகளுக்குள் செல்ல முடியும்.
கரீபியன் விசா இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
- குறுகிய கால கரீபியன் விசா(90 நாட்களுக்கு உள் தங்கியிருத்தல் அனுமதிக்கிறது)
- நீண்ட கால கரீபியன் விசா(90 நாட்களுக்கு மேல் தங்கியிருத்தல் அனுமதிக்கிறது)
நெதர்லாந்து விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் பயண நோக்கம் மற்றும் கால அளவின் அடிப்படையில், சரியான விசா வகையைத் தேர்வு செய்யவும்.
தேவையான ஆவணங்களை தயார் செய்யவும், இதில் செல்லுபடியான பாஸ்போர்ட், விசா விண்ணப்ப படிவம், தங்குமிடத்தின் சான்று, பயண திட்டம், நிதி சான்று மற்றும் விசா வகையைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் இருக்கலாம்.
அதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்பத்தை உங்கள் நாட்டில் அல்லது விசா விண்ணப்ப மையம் மூலம் நெதர்லாந்து தூதரகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
விசா கட்டணம் கோரப்படும், ஆனால் தொகை உங்கள் தேசிய மற்றும் விசா வகையைப் பொறுத்து மாறுபடலாம்.
சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தூதரகத்தில் நேர்காணலுக்கு தோன்றுமாறு கேட்கப்படலாம்.
விசா செயலாக்க நேரம் மாறுபடலாம், எனவே உங்கள் திட்டமிட்ட பயணத்திற்கு முன்பே விண்ணப்பிப்பது நல்லது.
கூடுதல் தகவல்களுக்கு நெதர்லாந்து இடம்பெயர்வு இணையத்தை பார்க்கவும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |