அப்பாவி உக்ரேனியர்களை ரஷ்யர்கள் எப்படி கொன்றார்கள்.. பதைபதைக்க வைக்கும் புதிய வீடியோ ஆதாரங்கள்
உக்ரைனின் புச்சா நகரில் மார்ச் 4ம் திகதி கிட்டதட்ட 9 உக்ரேனியர்களை ரஷ்ய வீரர்கள் எப்படி கொன்றார்கள் என்பதை காட்டும் வீடியோ ஆதாரங்களை அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் உக்ரைனின் புச்சா நகரில் உள்ள சாலையில் வரிசையாக பொதுமக்கள் கொல்லப்பட்ட சடலமாக கிடந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
புச்சாவில் ரஷ்ய படைகள் போர்க்குற்றம் நிகழ்த்தியுள்ளதாக குற்றம்சாட்டிய மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. எனினும், மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது.
இந்நிலையில், மார்ச் 4ம் திகதி புச்சா நகரில் பாதுகாப்பு கமெரா மற்றும் சம்பவயிடத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தவர் பதிவு செய்த வீடியோக்களை பெற்று நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
மார்ச் 4ம் திகதி பதிவு செய்யப்பட்ட வீடியோவில், உக்ரேனியர்கள் 9 பேரை பணயக்கைதிகளாக பிடித்த ரஷ்ய வீரர்கள், புச்சா நகரில் உள்ள தெரு ஒன்றில் துப்பாக்கி முனையில் வரிசையாக அழைத்து செல்கின்றனர்.
பிறகு உக்ரேனியர்கள் அனைவரையும் ரஷ்ய வீரர்கள் கட்டாயப்படுத்தி தரையில் படுக்க வைக்கிறார்கள், பணயக்கைதிகளில் ஒருவர் நீல நிற ஹூட் ஸ்வெட்ஷர்ட் அணிந்திருப்பது தெரிகிறது. அத்துடன் முதல் வீடியோ முடிகிறது.
இதற்கு பின்ன என்ன நடந்தது என்பதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
பிறகு ரஷ்ய வீரர்கள் உக்ரேனியர்களை 144 யாப்லுன்ஸ்கா தெருவில் உள்ள அலுவலக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த கட்டிடம் ரஷ்யர்களின் தளமாக செயல்பட்டு வந்தது.
பின் அங்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பணயகைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் யாரும் திரும்பி வரவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுநாள் மார்ச் 5ம் திகதி 144 யாப்லுன்ஸ்கா தெருவில் ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், ரஷ்யாவின் தளமாக செயல்பட்டு வரும் அலுவாக கட்டிடத்திற்கு அருகே சடலங்கள் கிடப்பதை காட்டுகிறது.
New evidence — including three videos obtained by The New York Times — shows how Russian paratroopers rounded up and executed at least eight Ukrainian men in Bucha on March 4, a likely war crime. https://t.co/EnA2q943Ds pic.twitter.com/BRMDeGo0u6
— The New York Times (@nytimes) May 19, 2022
ரஷ்யாவாக மாறும் உக்ரைனின் பிரபல நகரம்! கவர்னர் அறிவிப்பு
சடலங்களுக்கு அருகே 2 ரஷ்ய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் நிற்கின்றனர், அந்த சடலங்களில் பயணக்கைதியாக அழைத்துச்செல்லப்பட்ட நீல நிற ஹூட் ஸ்வெட்ஷர்ட் அணிந்திருந்தவரும் சடலமாக கிடக்கிறார்.
இந்த வீடியோ ஆதராங்களின் மூலம் புச்சாவில் ரஷ்ய படைகள் சாத்தியமான போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.