அன்றாட மளிகை பொருட்களைக் கூட வெளிநாட்டில் ஆர்டர் செய்யும் நியூசிலாந்து மக்கள்!
அதிக விளைவாய்ஸ் காரணமாக அன்றாட தேவைக்கான மளிகைப் பொருட்களைக் கூட அண்டை நாடான அவுஸ்திரேலியாவில் இருந்து ஆர்டர் செய்யும் நிலைமை நியூசிலாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து பணவீக்கத்தை எதிர்கொண்டுவருகிறது. மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை முந்தைய ஆண்டை விட 7.6 சதவீதம் அதிகமாக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டிராத அளவிற்கு மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு ஆகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை ஏற்கனவே அதிகமாக உள்ளது. வருடாந்திர பணவீக்கம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வாக 6.9 சதவீதத்தை எட்டியது.
இந்த நிலையில், நியூசிலாந்து மக்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள், மேலும் இது மலிவான விருப்பமாக மாறி வருகிறது.
நியூசிலாந்தில் இருப்பதை விட அவுஸ்திரேலியாவில் பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எந்த அளவிற்கு என்றால், அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் டெலிவரி செய்து அதற்கான கட்டணங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டாலும், அது நியூசிலாந்தில் பொருட்களை வாங்குவதை விட மலிவானதாக இருப்பதாக கூறுகின்றனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து பொருட்கள் வருவதற்கு சிறிது நேரம் ஆகும், ஆனால் வாங்குபவர்களின் கூற்றுப்படி, காத்திருப்பு பயனுள்ளது என்கின்றனர். அந்த வகையில் தற்போது, வாடிக்கையாளர்கள் கெட்டுப்போகாத பொருட்களை ஆர்டர் செய்ய விரும்புகின்றனர்.
நியூசிலாந்தில் உள்ள உள்ளூர் ஊடகங்களுக்கு ஒரு பெண் தனது மளிகைப் பொருட்களில் 35 சதவீதத்தை சேமித்ததாக கூறினார். அவர் பருப்புகள், உளர் பொருட்கள், சுத்தம் செய்யும் பொருட்கள் போன்ற மொத்தமாக ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.