பதவி ஏற்பு விழாவில் புதிய பிரதமர் கூறிய சர்ச்சை விடயம்! வலுக்கும் கண்டனம்
நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவதாக கூறியது பொது சுகாதார நிபுணர்கள் இடையே கண்டனத்தை பெற்றுள்ளது.
புதிய பிரதமர்
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில் தேசிய கட்சி வெற்றிதைத் தொடர்ந்து, அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்ஷன் (Christopher Luxon) நாட்டின் புதிய பிரதமராக தெரிவானார்.
அதனைத் தொடர்ந்து நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய லக்ஷன், நியூசிலாந்தில் அமையவிருக்கும் கன்சர்வேடிவ் அரசாங்கம் புகையிலை தொடர்பான கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
Marty MELVILLE
வலுக்கும் கண்டனம்
அத்துடன் சிகரெட் தடையானது கறுப்புச் சந்தை தோன்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையானது.
இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை! விடுவிக்கப்பட்டதும் கூறிய அதிர்ச்சி விடயம்
பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் புகைபிடித்தல் எதிர்ப்பு அமைப்பினர் அவரது இந்த முடிவுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.
புகைபிடித்தல் எதிர்ப்புக் குழுவான Health Coalition Aotearoa வெளியிட்ட அறிக்கையில், 'இது பொது சுகாதாரத்திற்கு ஒரு பெரிய இழப்பு மற்றும் புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாகும், அதன் லாபம் கிவியின் (நியூசிலாந்து மக்கள்) வாழ்க்கை இழப்பில் உயர்த்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSS Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |