திருமண 8 நாட்களில் புதுமாப்பிள்ளை மரணம்
தமிழக மாவட்டம் கடலூரில் புதுமாப்பிள்ளை திருமணமான எட்டு நாட்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுமாப்பிள்ளை
கடலூர் மாவட்டத்தை அடுத்த கெங்கநாயக்கன் குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது விமல்ராஜ் கேபிள் ஆப்ரேட்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும் ரவீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருப்பாதிபுலியூரில் செல்போன் கேபிளை சரிசெய்யும் பணியில் விமல்ராஜ் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பி அவர் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்து விமல்ராஜ் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி பலி
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு விமல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், விமல்ராஜ் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 8 நாட்களிலேயே புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Representational
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |