நேரலையில் பெண் செய்தி வாசிப்பாளர் செய்த விடயம்..இஸ்ரேல் ஆதரவு என அதிரடி பணிநீக்கம்
துருக்கி செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையின்போது காபி கோப்பையை மேசையில் வைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
மேசையில் காபி கோப்பை
TGHR Haber என்பது துருக்கி நாட்டில் உள்ள செய்தி ஊடகம் ஆகும். இதில் செய்தி வாசிப்பாளராக மெல்டெம் குணே (Meltem Gunay) பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மெல்டெம் செய்தி நேரலையின்போது மேசை மீது Starbucks நிறுவனத்தின் காபி கோப்பையை தெளிவாக தெரியும்படி வைத்து, செய்தியை தொகுத்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, Starbucks காபி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிறுவனம் என பார்வையாளர்கள் மெல்டெமின் செயலை கடுமையாக விமர்சித்தனர்.
@TGRT
அதிரடி பணிநீக்கம்
இதன் காரணமாக சில மணிநேரங்களிலேயே 'மறைமுக விளம்பரம்' செய்ததாக கூறி மெல்டெம் மற்றும் செய்திப் பிரிவின் இயக்குனர் ஆகிய இருவரையும் TGRT ஊடகம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது.
அத்துடன் அவர்களின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாகவும், தங்களுக்கு காசா தொடர்பான துருக்கிய மக்களின் உணர்வுகளை அறிந்து, அவர்களை இறுதிவரை பாதுகாக்கும் பிரிதல் உள்ளது என்றும் கூறியுள்ளது.
அறிக்கை விளக்கம்
மேலும் TGRT வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளின்படி TGRT செய்தி தொலைக்காட்சியில் எந்தவொரு நிறுவனத்தையும் மறைமுகமாக விளம்பரம் செய்யும் வகையில் அறிவிப்பாளர் வெளியிடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்கைக்கு முரணாக செயல்பட்ட செய்தி தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் நியாயமான காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இனிமேல் எங்கள் நிறுவனம் காசா மற்றும் துருக்கிய மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களின் உணர்வுகளை இறுதிவரை பாதுகாக்கும். இது மரியாதையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் டெல் அவிவ் இடையேயான உறவுகள், காசா பகுதி மீது இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுக்கு இடையில் வேகமாக சீர்குலைந்துள்ளன.
File Photo
துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், காஸாவில் போர்க்குற்றம் இழைத்து சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் ஒரு 'பயங்கரவாத நாடு' என்று கடுமையாக கடந்த மாதம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |