வடகொரிய ஜனாதிபதியுடன் கூடவே காணப்படும் ஒரு புதிய பெண்: அவர் யார் தெரியுமா?
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், நேற்று முன்தினம் இரவு, இராட்சத ஏவுகணைகளைச் சுமந்துசெல்லும் வாகனங்களின் போர் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
அப்போது, அந்த பயங்கர ஆயுதங்களையும் மீறி மற்றொரு விடயம், அல்லது நபர் கவனம் ஈர்த்தார்.
அந்த நபர் ஒரு சிறுபெண்!
யார் அந்தப் பெண்?
இந்த சிறுபெண், கடந்த மூன்று மாதங்களாக கிம் தோன்றும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருடன் தோன்றிவருகிறார்.
அவர், கிம்மின் மகளான Kim Ju-ae...
image -KCNA
வடகொரியாவை ஆள அடுத்த வாரிசு தயார்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், முதன்முறையாக Kim Ju-ae தன் தந்தையுடன் ஏவுகணை ஒன்றை நிறுவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, தன் தந்தையின் கைகளைப் பற்றிக்கொண்டு குழந்தைபோல ஒரு வெள்ளை ஜாக்கெட் அணிந்து, தலையில் போனி டெயிலுடன் காணப்பட்டார் Kim Ju-ae.
ஆனால், அடுத்தடுத்த முறைகள் அவர் தன் தந்தையுடன் தோன்றியபோது அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் காணப்பட்டன. செவ்வாயன்று இரவு அணிவகுப்புக்கு முன், வடகொரியாவின் மூத்த இராணுவத் தலைவர்களுடன் அரசு முறை விருந்தொன்றில் கலந்துகொண்டபோது, Kim Ju-ae தன் தலைமுடியை நேர்த்தியாக கிளிப் செய்து, வெள்ளை சட்டை மற்றும் சூட்டில் காட்சியளித்தார்.
அடுத்தபடியாக, பேரணியின்போது தன் தந்தையுடன் நின்று பேரணியைப் பார்வையிட்டபோது, தன் தந்தையைப்போலவே கருப்புக் கோட்டும் தொப்பியும் அணிந்து, ஒரு குட்டிக் கிம்மாகவே காட்சியளித்தார் Kim Ju-ae.
திடீரென கிம் மகளை அறிமுகம் செய்வது ஏன்?
இந்த Kim Ju-ae, கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் என கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 10 வயதுதான் ஆகிறதாம். அப்படியிருக்கும்போது, திடீரென முக்கிய நிகழ்ச்சிகளில் அவரை அவரது தந்தை அறிமுகம் செய்யக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலில் கிம் ஜாங் உன்னுடைய அன்பிற்குரிய மகள் என அறிமுகம் செய்யப்பட்ட Kim Ju-ae, செவ்வாயன்று கிம் ஜாங் உன்னுடைய மரியாதைக்குரிய மகள் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
image -KCNA
அதாவது, வடகொரியாவில் நாட்டை ஆளப்போகிறவர் என்பதுபோன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர் மட்டுமே மரியாதைக்குரிய என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, கிம் ஜாங் உன் இப்போதே தன் மகள் Kim Ju-aeவை வருங்கால ஜனாதிபதியாக அறிமுகப்படுத்துகிறார்.
ஆனால், Kim Ju-aeக்கு 10 வயதுதானே ஆகிறது?
கிம் ஜாங் உன் அடுத்த ஜனாதிபதியாவார் என்ற நிலை உருவானபோதுதான், அவர், மரியாதைக்குரிய என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். ஆனால், Kim Ju-aeவோ, 10 வயது ஆவதுற்குள்ளேயே மரியாதைக்குரிய என்ற அடைமொழியுடன் அழைக்கப்படக் காரணம்?
அதாவது, கிம் ஜாங் உன் தன் தந்தை இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் அடுத்த ஜனாதிபதியாக மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டாராம். அவர் தன்னை அதிகாரத்தில் நிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்ததாம்.
ஆகவே, அந்தக் கஷ்டம் தன் மகளுக்கு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் 10 வயதுக்குள்ளேயே தன் மகளை மக்கள் முன் அடுத்த வாரிசாக அறிமுகம் செய்கிறாராம் கிம் ஜாங் உன்!
image -KCNA