நயாகரா அருவியில் ஒளிர்ந்த இந்திய தேசிய கொடி: பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நயாகரா அருவி இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
पीएम मोदी के अमेरिका दौरे के बीच दुनिया भारत-यूएस संबंधों में नई ऊर्जा देख रही है, इसी कड़ी में न्यूनॉर्क के नियाग्रा फॉल्स को तिरंगे के रंग में रंग दिया गया, आप भी देखिए वीडियो. #NiagaraFalls #Newyork #PMModiInUSA #NarendraModi #JoeBiden pic.twitter.com/sfIv77oi6S
— AajTak (@aajtak) June 23, 2023
அதனை தொடர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.
பின் அமெரிக்க அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்திலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
நயாகரா அருவியில் ஒளிர்ந்த இந்திய தேசிய கொடி
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை தொடர்ந்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் அசத்தலான வரவேற்பு வழங்கப்பட்டது.
US: Niagara Falls lit up in tricolour to welcome PM Modi
— ANI Digital (@ani_digital) June 23, 2023
Read @ANI Story | https://t.co/z7xKtwuuNG#US #NiagaraFalls #Tricolour #PMModi pic.twitter.com/j6T1QJ2yvM
அத்துடன் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மற்றும் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் என இரண்டிலும் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிற ஒளிரூட்டப்பட்டது.
இந்த வரிசையில் தற்போது உலக புகழ்பெற்ற நயாகரா அருவி இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் மிக நேர்த்தியாக ஒளிர வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |