11 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்வு! நைஜர் வெள்ளப்பெருக்கில் 399 பேர் உயிரிழப்பு
நைஜர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதுடன், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நைஜர் வெள்ளப்பெருக்கு
கடந்த ஜூன் மாதம் முதல் நைஜர் நாட்டை தாக்கி வரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 339 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தெரிவிக்கப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையிலிருந்து இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
#AESinfo | #Niger ??
— AES INFO (@AESinfos) August 22, 2024
Catastrophe humanitaire, les inondations font plus de 130 morts
Les récentes inondations au Niger ont causé une catastrophe humanitaire sans précédent. Le bilan s’élève désormais à plus de 130 décès, principalement dus aux noyades et aux effondrements de… pic.twitter.com/3VL4Px0UGJ
அத்துடன் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஹேல் பகுதியில் நிலவும் தீவிர வானிலை காரணமாக, பெய்த கனமழை நாடு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
200% அதிக மழைப்பொழிவு
நைஜர் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கில் உள்கட்டமைப்பு, கால்நடை மற்றும் உணவு பொருட்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
Pluies exceptionnelles au Niger: au moins 339 morts depuis juin, plus d'un million de sinistréshttps://t.co/7kLGrHYWFX pic.twitter.com/fzFMqYC1al
— BFMTV (@BFMTV) October 9, 2024
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஜிந்தரில் உள்ள ஒரு வரலாற்றுப் பள்ளிவாசல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தேசிய வானிலை ஆய்வு மையம், நைஜரின் சில பகுதிகளில் முந்தைய ஆண்டுகளை விட 200% வரை அதிக மழை பெய்ததாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |