நைஜீரியாவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் பரிதாபமாக பலி
நைஜீரியாவில் பஸ் ஒன்று லாரி உடன் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
பஸ்-லாரி மோதி விபத்து
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள எனுகு-போர்ட் ஹார்கோர்ட் நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் 15 பேர் வரை உடல் கருகி உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம்
பஸ் விபத்தில் பலர் படுகாயம் அடைந்து இருக்கும் நிலையில், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மீட்பு படையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பஸ் டிரைவர் பயணத்தின் போது தூங்கியதே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.