டேங்கர் லொறி வெடித்து பாரிய விபத்து! பெட்ரோல் எடுக்க சென்று மரணம்..181 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.
பாரிய விபத்து
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லொறி ஒன்று கடந்த வாரம் ஜிகாவா சாலையில் விபத்துக்குள்ளானது.
சாலையில் எண்ணெய் முழுவதும் கொட்டி வெடித்துச் சிதறியதில் பாரிய அளவில் தீ பரவியது. இதில் எண்ணெயை சேகரிக்க சென்ற மக்கள் உட்பட 94 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் டேங்கர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஐத் தாண்டியுள்ளதாக மாநில ஆளுநர் உமர் நமாடி கூறியதாக Xinhua செய்தி வெளியிட்டுள்ளது.
210 குடும்பங்கள் பாதிப்பு
இந்த பாரிய வெடிவிபத்தில் 210 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களில் பெரும்பலானோர் வடிகால் வாய்க்காலில் கொட்டிய எண்ணெயை சேகரிக்க சென்றவர்களே என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசு ஏற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஜியாவில் பலியானவர்களுக்கு வெகுஜன அடக்கம் அக்டோபர் 16ஆம் திகதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |