அது ஹாலிவுட் நிர்வாணம்... மேகன் மெர்க்கலை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ஒருவரின் மனைவி
நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேகன் மெர்க்கலின் உடைகள் தொடர்பான தெரிவை மிக மோசமாக விமர்சித்துள்ளார் அந்த நாட்டு ஜனாதிபதியின் மனைவி.
கலாச்சார விழுமியங்களை
நைஜீரியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறார் Bola Tinubu. இந்த நிலையில், பெண்மையை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி போலா டினுபுவின் மனைவி செனட்டர் Oluremi Tinubumade தமது உரையின் போது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதில், வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் எவ்வாறு பங்களித்துள்ளனர் என்பதை குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதி போலா டினுபுவின் ஆட்சி நைஜீரிய கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தியது என்றும்
அவை அமெரிக்கர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும், எது பொருத்தமான ஆடை மற்றும் அடக்கமாக கருதப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயத்தை இழக்க வேண்டாம்
மேலும், நாம் ஒன்றும் ஆடை அலங்கார கண்காட்சியை முன்னெடுக்கவில்லை, எங்கும் நிர்வாணமாகவே காட்சி அளிக்கிறது. நமது கலாச்சாரத்தில் நிர்வாணத்திற்கு இடமில்லை, அது அழகும் அல்ல, அப்படியான நிலை அழகாக இருக்கவும் வாய்ப்பில்லை,
அது ஹாலிவுட் நிர்வாணம் என்றார். ஆப்பிரிக்காவுக்கு எதைத் தேடி மேகன் வந்தார், நாம் யார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும், சுயத்தை நீங்கள் இழக்க வேண்டாம் எனவும் செனட்டர் Oluremi Tinubumade தமது உரையில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |