ஜெயலலிதா புடவையை இழுத்தார்கள்.. ஏன் அப்போது? திமுகவுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திரௌபதியை பற்றி பேசும் திமுகவுக்கு ஜெயலலிதாவை பற்றி பேச மறந்து விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பை அரசியல் செய்ய கூடாது
இந்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று 3 ஆவது நாளாக நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் திமுக எம்பி கனிமொழி பேசிய பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனக் கூறினார்.
ஜெயலலிதா புடவையை இழுத்தார்கள்
மேலும் பேசிய அவர், "கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா புடவையை இழுத்தார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் அவரை பார்த்து சிரித்தனர்.
பின்பு ஜெயலலிதா, முதல்வரான பிறகு தான் சட்டமன்றத்திற்கு வருவேன் என சபதம் எடுத்தார். அதே போல் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஆனார்.
திரௌபதியை பற்றி பேசுகிறீர்கள், கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு திமுக மறந்துவிட்டதா" என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |