நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார்! கைலாசாவின் பிரதிநிதி ஐ.நா-வில் அதிரடி பேச்சு
சமீபத்தில் ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், United States of Kailasa வின் பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியிருந்தது.
சமூகவலைத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலயைில் ஐ.நா-வின் இந்தக் கூட்டத்தில், கைலாசாவின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய விஜயப்ரியா நித்யானந்தா துன்புறுத்தப்படுகின்றார் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகூறித்து இவர் கூறியுள்ளதாவது,
இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு கைலாசா. இதை நிறுவியவர், இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்த பரமசிவம். இவர், தான் பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பிப்பதற்காக, இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
எனவே, நித்யானந்தா உட்பட கைலாசாவிலுள்ள இரண்டு மில்லியன் இந்து புலம்பெயர் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
தற்போது இது சர்சையை கிளைப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.