கட்டண உயர்வு இல்லை... துபாய் பாடசாலைகள் குழு அறிவிப்பு
துபாய் கல்வித்துறை கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ள நிலையிலும், புதிய கல்வியாண்டில் கட்டண உயர்வு இருக்காது என்றே துபாய் பாடசாலைகள் குழு அறிவித்துள்ளது.
கட்டண உயர்வுக்கு அனுமதி
துபாய் கல்வித்துறையான KHDA செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 5.2 சதவிகிதம் வரையில் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருந்தது. 2024 மற்றும் 2025 கல்வியாண்டில் அமுலுக்கு கொண்டுவரவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலகளாவிய விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் புதிய கல்வியாண்டில் கல்வி கட்டணம் உயர்வு இருக்காது என இந்திய பாடசாலைகள் குழு அறிவித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் வசூலிக்கப்பட்ட அதே கட்டணத்தையே, புதிய கல்வியண்டிலும் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சில பெற்றோர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு, கட்டண உயர்வு இன்றியே உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளிக்க தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |