உணவு நெருக்கடிக்கும், உக்ரைன் ராணுவ நடவடிக்கைக்கும் தொடர்பில்லை: ரஷ்யா அதிரடி!
உக்ரைன் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கும் தற்போதைய உணவு நெருக்கடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால், உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உணவுத் தானியங்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டியிருந்த உரங்கள் ஆகியவை தடைப்பட்டுள்ளன.
இதனால் உலக அளவில் உணவு பொருள்களின் நெருக்கடி மற்றும் கடுமையான விலையேற்றம் ஆகியவை அதிகரித்து மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை இன்னலுக்குள் தள்ளியுள்ளது.
உதாரணமாக ஐக்கிய நாடுகளின் சபையின் உணவு வழங்கல் அமைப்பு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கி வந்த ரேசனின்(உணவு பொருளின்) அளவை பாதியாக குறைத்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கும் உலகின் உணவு நெருக்கடியும் எந்தவொரு தொடர்பும் இல்லை என ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அடோலாஹியனுடன் வியாழன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை அடுத்து நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், உக்ரைனில் எஞ்சியிருக்கும் தானியத்தின் அளவை உலகின் சோகமாக மாற்றும் முயற்சிகள் முற்றிலும் நேர்மையற்ற கொள்கையாகும், ஏனென்றால் கோதுமை மற்றும் பிற தானிய பயிர்களின் உலகளாவிய உற்பத்தியில், உக்ரைனில் எஞ்சியிருக்கும் தானியமானது 1% க்கும் குறைவாகவே உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்று லாவ்ரோவ் கூறினார்.
அத்துடன் மேற்கத்திய நாடுகளின் தோல்வி மற்றும் தவறுகளை உணவு மற்றும் உரங்களின் விசஷயத்தை கொண்டு திசை திருப்பும் வித்தையை பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்தார். இந்த அறிக்கையானது அமெரிக்கா மற்றும் சர்வதேச அமைப்புகளின் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: புடினின் அணுஆயுதப் பெட்டியை சுமந்துவரும்...முன்னாள் கர்னல் மீது துப்பாக்கி சூடு!
சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, சந்தையில் தானியத்தின் அளவு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து லாவ்ரோவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.