ஆண்களுக்கு தடை; பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட தீவு - என்ன காரணம்?
மன அழுத்தத்தை குறைக்க குடும்பம் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் பழக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது.
ஆனால் ஒரு தீவு ஒன்றில் ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூப்பர்ஷீ தீவு
பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி அருகே பால்டிக் கடலில் அமைந்துள்ளது இந்த சூப்பர்ஷீ (SuperShe) தீவு. 4 புறமும் கடலால் சூழப்பட்ட இந்த சூப்பர்ஷீ தீவு 8.4 ஏக்கர் பரப்பளவிலானது.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா ரோத் (Kristina Roth) என்பவர் Matisia Consultants என்ற தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்தார்.
credit : Supershe island
மேலும், SuperShe என்ற பெண்களுக்கான இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வந்தார்.
கிறிஸ்டினா ரோத் பின்லாந்திற்கு சுற்றுலா வந்த போது, ரோத்தின் காதலர் இந்த தீவை அவருக்கு அறிமுகம் செய்துள்ளார்.
பெண்களுக்கு மட்டுமே அனுமதி
இந்த தீவின் இயற்கை அழகு ரோத்தை கவர்ந்த நிலையில், தனது நிறுவனத்தை விற்ற தொகையை வைத்து 2017 ஆம் ஆண்டில் அந்த தீவை விலைக்கு வாங்கி, அதை பெண்கள் மட்டும் தங்கும் தீவாக மாற்றினார்.
ஆனால், தீவின் கட்டுமானத்திற்கு ஆண் கட்டுமான தொழிலாள்ர்களையே பயன்படுத்தியுள்ளார்.

credit : Supershe island
இங்கு வரும் பெண்கள் அழகிய கடற்கரை, பசுமையான மரங்கள் ஆகியவற்றை ரசிக்கலாம். மேலும், ஆடம்பர தங்கும் விடுதிகள் இருந்தன. இயற்கையான உணவுகள் பரிமாறப்பட்டது.
மேலும், யோகா, காடுகளுக்குள் நடை பயணம், நீச்சல், மசாஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கே இருந்தது.
credit : Supershe island
இந்த தீவில் நுழைபவர்களுக்கு, தொழில்நுட்ப வாழ்க்கையில் இருந்து துண்டித்து, இயற்கையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த தீவின் உள்ளே நுழைய விரும்புபவர்கள், SuperShe இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதிகப்படியான நபர்கள் இருப்பதை தவிர்க்க ஒரு நேரத்தில் 8 பெண்களுக்கு மட்டுமே தங்க அனுமதி வழங்கப்பட்டது.
விற்பனைக்கு வந்த தீவு
ஆனால், இதற்கு ஒரு வாரத்திற்கு 4,600 யூரோ(இந்திய மதிப்பில் ரூ.4.84 லட்சம்) கட்டணமாக விதிக்கப்பட்டது. மேலும், உயர் வர்க்க பெண்களை மட்டுமே அனுமதிப்பதாக கிறிஸ்டினா ரோத் மீது விமர்சனம் எழுந்தது.
சுமார், 8,500 பேர் இந்த தீவுக்கு நுழைய அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.
ஆனால், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிறிஸ்டினா ரோத் இந்த தீவை கப்பல் நிர்வாகியான டீயன் மிஹோவ்(deyan mihov) என்பவரிடம் ஒரு மில்லியன் யூரோவிற்கு விற்பனை செய்தார்.

இந்த தீவை வாங்கிய டீயன் மிஹோவ், "இங்கு குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதைத் தவிர, தீவிற்கான குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் இல்லை" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |