குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா? நிபுணர் விளக்கம்
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என ரஷ்யாவின் முன்னாள் தலைமை சுகாதார மருத்துவரும், கல்வி மற்றும் அறிவியலுக்கான அரசின் Duma குழுவின் முதல் துணைத் தலைவருமான Gennady Onishchenko தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து Gennady Onishchenko கூறியதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது.
இப்போதைக்கு அதற்கு அவசர தேவை இல்லை என்று நான் நமபுகிறேன், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் குழந்தைகள் பெருமளவில் இல்லை.
குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமான தடுப்பூசி தேவை, influenza-வுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு என வித்தியாசமான தடுப்பூசி இருந்தது என்று Onishchenko குறிப்பிட்டார்.
அதேசமயம் இப்போது அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தரவுகள் காட்டுகிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பெரும்பான்மையான நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர், ஆனால் இதற்கு குழந்தைகள் தடுப்பூசி தேவைப்படுகிறது என Onishchenko தெரிவித்துள்ளார்.