உக்ரைனுக்கு Tomahawks ஏவுகணை... மீண்டும் ஏமாற்றமளித்த ட்ரம்ப்
ரஷ்யாவிற்கு எதிராகப் பயன்படுத்த Tomahawks ஏவுகணைகளைப் பெற உக்ரைனை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை தாம் தற்போதைக்கு பரிசீலிக்கவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது இல்லை
அமெரிக்காவின் Tomahawks ஏவுகணை தொடர்பில் உக்ரைனின் நேரடியான கோரிக்கையும் ட்ரம்பால் நிராகரிக்கப்பட்டது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சமீபத்திய தொலைபேசி உரையாடலுக்கு முன்னர் வரையில்,

உக்ரைனுக்கு Tomahawks ஏவுகணை வழங்கப்படலாம், இறுதி முடிவெடுக்கப்படவில்லை என கூறி வந்த ட்ரம்ப், புடின் உடனான தொலைபேசி உரையாடலுக்கு பின்னர், அவருடனான நேரடி சந்திப்பையும் ரத்து செய்ததுடன், உக்ரைனுக்கு Tomahawks ஏவுகணை வழங்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் அறிவித்தார்.
ஆனால், நேட்டோ நாடுகள் ஊடாக அமெரிக்காவிடம் இருந்து Tomahawks ஏவுகணையை வாங்கும் திட்டம் உக்ரைன் முன்னெடுத்த நிலையில், அதற்கும் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை தீவிரப்படுத்த தாம் விரும்பவில்லை என்றே ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். Tomahawks ஏவுகணைகளை உக்ரைனுக்கு அல்லது நேட்டோ நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை அவர் பரிசீலித்து வருகிறாரா? என்ற கேள்விக்கு,

மாஸ்கோ உட்பட
இல்லை என பதிலளித்துள்ள ட்ரம்ப், ஆனால் தமது முடிவு எப்போதுவேண்டுமானாலும் மாறலாம் என்றார். அக்டோபர் 22 அன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது, ட்ரம்ப் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோர் உக்ரைனுக்கு Tomahawks ஏவுகணை வழங்குவது குறித்து விவாதித்தனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை ரூட்டே தெரிவிக்கையில், இந்த விவகாரம் மறுஆய்வில் இருப்பதாகவும், அது குறித்து அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Tomahawks ஏவுகணைகள் 2,500 கிமீ (1,550 மைல்கள்) தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை, மாஸ்கோ உட்பட ரஷ்யாவிற்குள் பெருநகரங்களைத் தாக்கும் அளவுக்கு வலுவானவை.
இதன் காரணமாகவே உக்ரைனுக்கு Tomahawks ஏவுகணைகளை வழங்குவதை விளாடிமிர் புடின் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |