இரட்டை கோபுரம் தூள் தூளாக தகர்க்கப்பட்டது! வைரலாகும் வீடியோ காட்சி
நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டு தூள் தூளாக்கப்பட்டது.
வீடியோ காட்சி இணையத்தில் வைரல்
இந்தியாவின் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டது.
318 அடி உயரமுள்ள இந்த கோபுரம் விதிகளை மீறி கட்டப்பட்ட காரணத்துக்காக இந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் 'சூப்பர் டெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதில் 'அபெக்ஸ்' என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது; உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
#WATCH | Once taller than Qutub Minar, Noida Supertech twin towers, reduced to rubble pic.twitter.com/vlTgt4D4a3
— ANI (@ANI) August 28, 2022
இந்தியாவில் இரட்டை கோபுரம் இன்று தகர்ப்பு! குதூப் மினாரை விட உயரம்.. ஏன் இடிக்குறாங்க தெரியுமா?
கட்டுமானம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து இரட்டை கோபுரங்களை இடிக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு, பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது.
இறுதியாக, இன்று கட்டாயமாக இரு கோபுரங்களையும் இடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இரட்டை கோபுரத்தை 'அடிபை இன்ஜினியரிங்' என்ற நிறுவனத்திடம் இடிப்பு பணி ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சற்றுமுன்னர் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.