சைவ பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு அசைவ பிரியாணி - ஊழியர் கைது
உத்தரபிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், Swiggy தளத்தின் மூலம் சைவ பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
சைவ பிரியாணிக்கு பதிலாக அசைவம்
டெலிவரி செய்யப்பட்ட பிரியாணியை சிறிது சாப்பிட அவர், தனக்கு வழங்கப்பட்ட பிரியாணி அசைவ பிரியாணி என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக அழுதுகொண்டே சமூகவலைத்தளத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
स्विगी का ये जघन्य अपराध है, 🙁😡🤬
— Dr Monika Singh (@Dr_MonikaSingh_) April 7, 2025
ग्रेटर नोएडा की छाया शर्मा ने स्विगी से वेज बिरयानी ऑर्डर की, लेकिन घर पर आई चिकन बिरयानी।
नवरात्रि में वेजेटेरियन लड़की को चिकन बिरयानी खिलाना उसकी भावनाओं के साथ खिलवाड़ है। pic.twitter.com/mLlLEHWsG3
இந்த வீடியோவில், "சுத்த சைவமான நான் சைவ பிரியாணி ஆர்டர் செய்திருந்தேன். மூன்று ஸ்பூன்கள் சாப்பிட்ட பிறகே அதில் இறைச்சி இருந்தது தெரியவந்தது. நவராத்திரி நாட்களில் வேண்டுமென்றே எனக்கு அசைவ உணவு வழங்கியுள்ளனர்" என குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து புகார் அளிக்க முயன்ற போது, உணவகம் மூடப்பட்டிருந்ததால் யாரும் தனது அழைப்பை ஏற்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் அந்த உணவகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, உணவை பார்சல் செய்த ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |