மாமிசம் சாப்பிட்டால் வேலை கிடையாது! ஆட்சேர்ப்புக்கு சீன நிறுவனம் வைத்துள்ள கொள்கை
அசைவம் சாப்பிட்டால் வேலை கிடையாது என சீன நிறுவனம் ஒன்று கராராக தெரிவித்துள்ளது.
அசைவம் சாப்பிட்டால் வேலை கிடையாது
பொதுவாக நிறுவனம் ஒன்று தங்கள் பணியாளர்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது அவர்களது கல்வி தகுதி, தனித்திறன், பாலினம், வயது மற்றும் நபரின் நல்லெண்ணம் அடிப்படையில் முக்கிய அளவுகோலாக பார்க்கும்.
ஆனால் சீனாவின் சென்சுவான் மாகாணத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்கள் தேர்வில் வித்தியாசமான அளவுகோல் ஒன்றை நிர்ணயித்துள்ளது.
அதில், மது அருந்தாதவர்கள், புகைப்பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் இறைச்சி சாப்பிடாத சைவப் பிரியர்கள் மட்டும் தான் தங்கள் நிறுவனத்தின் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் மாத ஊதியமாக 5 ஆயிரம் சீன யுவான் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 57,000) ஊதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
நிறுவனம் அளித்துள்ள விளக்கம்
இந்த நிலையில் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர், ஆன்லைனில் ஆச்சரியத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், “புகை பிடிக்க கூடாதா? மது அருந்தக் கூடாதா? இறைச்சி சாப்பிடக் கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நிறுவனம், எந்தவொரு பாகுபாடு எண்ணத்துடனும் இந்த நிபந்தனையை முன்வைக்கவில்லை, நீங்கள் இறைச்சி சாப்பிடவில்லை என்றால் மற்றவர்கள் ஏன் விலங்குகளை கொல்லப் போகிறார்கள்? இறைச்சி சாப்பிடுவது பசியை தீர்ப்பதாக இருந்தாலும் அதுவும் ஒரு வகையில் கொலை தான் என்பது மறுக்க முடியாதது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இது தங்கள் நிறுவனத்தின் கார்ப்பரேட் கொள்கை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |