எரிவாயு கசிவு நின்றுவிட்டது: நோர்ட் ஸ்ட்ரீம் 2 செய்தி தொடர்பாளர் வழங்கிய முக்கிய தகவல்
எரிவாயு பைப்லைனில் ஏற்பட்ட கசிவு நின்றுவிட்டது.
பெர்லின் அரசாங்கம் எரிவாயு குழாய்க்கான சான்றிதழை இடைநிறுத்தியதால் Nord Stream 2 செயல்பாடு நிறுத்தப்பட்டது.
எரிவாயு பைப்லைனில் ஏற்பட்ட எரிவாயு கசிவு தற்போது நின்றுவிட்டதாக தெரிகிறது என நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன் செய்தி தொடர்பாளர் ulrich lisssek தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரண்டு பைப்லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டன.
மேலும் இந்த கசிவு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டு இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை குற்றம் சாட்டினர்.
AFP
இந்த நிலையில் எரிவாயு பைப்லைனில் ஏற்பட்ட கசிவு, பூஜ்ஜியமாக்கப்பட்ட வாயுவின் அளவு மற்றும் கடல் நீரின் அழுத்தம் போன்ற காரணங்களால் நின்று விட்டதாக தெரிகிறது என நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைனின் செய்தி தொடர்பாளர் ulrich lisssek தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், கடல் நீரின் அழுத்தம் அதிகமோ அல்லது குறைவோ, பைப்லைன் மூடப்பட்டு விட்டது, அதனால் வாயு இனி வெளியேற முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் குழாயில் தற்போதும் வாயு இருப்பதாக ulrich lisssek தெரிவித்தார்.
AP
கூடுதல் செய்திகளுக்கு: சிறந்த வேல்ஸ் இளவரசியாக இருப்பீர்கள்: பெண்மணியின் கருத்துக்கு கேட் மிடில்டனின் காதல் நிறைந்த பதில்
உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கியதை அடுத்து, பெர்லின் அரசாங்கம் எரிவாயு குழாய்க்கான சான்றிதழை இடைநிறுத்தியதால், பிப்ரவரியில் Nord Stream 2 செயல்பாடு நிறுத்தப்பட்டது.