திடீரென ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா! அபாய எச்சரிக்கை தொடர்பில் ஜப்பானின் புதிய தகவல்
ஜப்பான் மற்றும் பெனின்சுலா இடையே கடலோர பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவதாக, தகவல் அறிந்த ஜப்பான் அரசு அப்பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏவுகணை சோதனை
ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய வகையிலான ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்துகிறது, என்ற எச்சரிக்கை தகவல் வெளியானது.
@ap
இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு, ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள் என அவசரப்படுத்தியது.
பொதுமக்கள் கட்டிடத்திற்கு அடியிலோ அல்லது நிலத்திற்கு அடியிலோ சென்று மறைவாக பதுங்கி கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.
@ap
ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தகவலை சேகரிக்க மற்றும் ஆய்வு செய்ய முடிந்த வரையிலான முயற்சியில் ஈடுபட அர்ப்பணிப்புடன் செயல்படவும், பொதுமக்களுக்கு விரைவான, போதிய தகவலை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
கடலில் விழுந்த ஏவுகணை
வருங்காலத்தில் நிகழ கூடிய அனைத்து விசயங்களுக்கும் தயாராவது உட்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.
@google map
எனினும், அந்த ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே கடலில் விழுந்து இருக்க கூடும் என ஜப்பானின் கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.
ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்க கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
[Emergency
— PM's Office of Japan (@JPN_PMO) April 12, 2023
North Korea has launched a suspected ballistic missile. More updates to follow.
மேலும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யசுகாஜூ ஹமடாவும் அந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பில் விழவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அபாய எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.