மீண்டும் பாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் வட கொரிய ஏவுகணை: அதிகரிக்கும் பதற்றம்
கண்டம் விட்டு கண்டம் பாயும் Hwasong-18 என்ற ஏவுகணை பரிசோதனையை வட கொரியா உறுதிப்படுத்தியதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
அமெரிக்கா மற்றும் தென் கொரியப் படைகளால் சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்ட வான் மற்றும் கடல் வழி போர் பயிற்சிகள் வட கொரியாவை பெரும் அளவு சீண்டியுள்ளது.
இந்த போர் பயிற்சிகளுக்கு ஆவேசமாக பதிலளித்த வட கொரியா, இதனை படையெடுப்பிற்கான ஒத்திகை என்று குற்றம் சாட்டியது.
EPA
அத்துடன் வட கொரியா தனது ராணுவ சோதனைகளை அதிகரித்துடன், கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் Hwasong-17 ஏவுகணை மற்றும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிரான அணுசக்தி எதிர் தாக்குதல் ஆகியவற்றை முன்னிறுத்தியது.
மீண்டும் ஏவுகணை சோதனை
இந்நிலையில் வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் Hwasong-18 ஏவுகணையை பரிசோதித்து இருப்பதாக வட கொரிய அரசு ஊடகம் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இராணுவத் திறன், மூலோபாயத் தாக்குதல் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
அத்துடன் இந்த ஏவுகணை பரிசோதனையை வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங்-உன் சோதனைக்கு வழிகாட்டினார்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் பியோங்யாங் ஒரு சந்தேகத்திற்குரிய ICBM ஏவுதலை வியாழக்கிழமை அன்று நடத்தியதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு ஜப்பான் ஹொக்கைடோ தீவில் ஒரு வெளியேற்ற உத்தரவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.