ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கிய பெருவெள்ளம்... தடுக்கத்தவறிய அதிகாரிகளுக்கு கிம் ஜோங் விதித்த தண்டனை
வடகொரியா மாகாணம் ஒன்றில் மொத்தமாக புரட்டிப் போட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4,000 பேர்கள் வரையில் பலியான சம்பவத்தில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.
பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு
வடகொரியாவின் Chagang மாகாணத்திலேயே சமீபத்தில் கன மழை காரணமாக பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 4,000 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்து.
இதில் தற்போது 20 முதல் 30 அதிகாரிகள் வரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், Chagang மாகாணத்தின் கட்சி செயலர் Kang Bong-hoon சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி கிம் ஜோங் உன் மேற்கொள்ளும் ஆய்வு நடவடிக்கைகளின் போது பல முறை உடனிருந்தவர் Kang Bong-hoon, அத்துடன் வடகொரியாவின் வெடிமருந்து தொழில் துறையின் முன்னாள் துணை இயக்குனர் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் வடமேற்கு மாகாணம் சமீபத்தில் மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்தனர். பலர் இறந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பினர்.
தண்டிக்கப்படுவார்கள்
இந்த நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில்,
கடும் மழைக்கு 4,100 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 7,410 ஏக்கர் அளவுக்கு வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் ரயில் நிலையங்கள், சாலைகள், அரசு அலுவலகங்கள் என வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போது நடவடிக்கை முன்னெடுக்க தவறிய அதிகாரிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றே அப்போது கிம் ஜோங் உன் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |