ஐ.நாவின் தடையை துணிந்து மீறும் வடகொரியா... இந்தமுறை ஏவுகணை அல்ல
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தடையை மீறி ராணுவ உளவு செயற்கைகோள்களை வடகொரியா அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்தில் தொடர் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா முன்னெடுத்துள்ளது.
@reuters
இது தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான்
இதனையடுத்து ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
@reuters
மேலும் தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.