ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு? ஆதார புகைப்படம் வெளியானது
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளிப்பதாகக் கூறப்படும் விடயம் உலக அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அதை ரஷ்யாவும் வடகொரியாவும் மறுத்துவந்தன.
இந்நிலையில், ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளிப்பதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் வடகொரியா
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவளிப்பதாக தென்கொரியா முதலான சில நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.
உக்ரைன் போரில் ரஷ்யா சார்பில் பங்கேற்பதற்காக 1,500 முதல் 3,000 வடகொரிய ராணுவ வீரர்கள் ஏற்கனவே பயிற்சிக்காக ரஷ்யா சென்றுள்ளதாகவும், டிசம்பர் வாக்கில் 10,000 வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யாவும் வடகொரியாவும் மறுத்துவந்த நிலையில், தற்போது, வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவில் இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
In the center of Moscow, Russians are already happily taking pictures with officers from the DPRK. pic.twitter.com/NNOtbZVf2a
— WarTranslated (Dmitri) (@wartranslated) October 23, 2024
வடகொரிய ராணுவ வீரர்களுடன் ரஷ்ய மக்கள் செல்பி எடுத்துக்கொள்வதைக் காட்டும் புகைப்படங்களை இங்கு காணலாம்.
இந்நிலையில், ரஷ்ய உக்ரைன் போரில், வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்குவார்களானால், அது ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ பசிபிக் பிராந்தியத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என தென்கொரிய உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |