புயல் எச்சரிக்கை; கிம் வம்ச உருவப்படங்களை பாதுகாக்க மக்களுக்கு உத்தரவு
வட கொரியா நாட்டில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் படத்தை தூக்கி எறியக்கூடாது என குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிம் வம்ச உருவப்படங்களை பாதுகாக்க மக்களுக்கு உத்தரவு
கானுன் புயல் நாட்டிற்குள் நுழையும் என எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா, மக்களின் முதல் முன்னுரிமை கிம் வம்சத்தின் உருவப்படம் மற்றும் சிலைகளை பாதுகாப்பதே என தெரிவித்துள்ளது.
புயல் தாக்குதலால் வடகொரியாவில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில், ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலகங்களிலும் கிம் ஜாங் உன், அவரது தந்தை, முன்னாள் ஆட்சியாளர் கிம் ஜாங் இல் மற்றும் அவரது தந்தை, நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங் ஆகியோரின் படங்கள் உள்ளன.
Photograph: KCNA/Reuters
கடுமையான தண்டனை கிடைக்கும்
இந்நிலையில், 1948-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து வடகொரியாவை ஆண்ட கிம் வம்சத்தின் ஏராளமான சிலைகள், மொசைக்குகள், சுவரோவியங்கள் மற்றும் பிற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்குமாறு குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களது உருவப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், கடுமையான தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Busan, South Korea
(AP)
கானுன் புயல்
வியாழக்கிழமை கொரிய தீபகற்பத்தில் கரையைக் கடந்த கானுன் புயல், வெள்ளிக்கிழமை வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெப்பமண்டல புயல் ஏற்கனவே தென் கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது, ஒரு இறப்பு பதிவாகியுள்ளது மற்றும் 16,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தென் கொரியாவில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 47 பேரைக் காவு வாங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இப்போது கானுன் புயல் வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
North Koreans ordered to protect portraits of Kim Jong-un, Kim dynasty, North Korea, Khanun storm