புடினுடன் நடந்த சந்திப்பு... அடுத்த கணம் வட கொரிய அதிகாரிகள் செய்த அதிர்ச்சி செயல்
சீனாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கிம் ஜோங் உன் நடத்திய சந்திப்பை அடுத்து, வட கொரிய அதிகாரிகளின் நடவடிக்கைகள் பேசுபொருளாக மாறியுள்ளது.
அனைத்து தடயங்களையும்
கிம் மற்றும் புடின் சந்திப்பை அடுத்து வட கொரிய தலைவர் தொட்ட அனைத்து மரச்சாமான்களையும் அதிகாரிகள் துடைத்து சுத்தம் செய்ததுடன், கிம் பயன்படுத்திய கிண்ணத்தையும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
விளாடிமிர் புடினுடனான சந்திப்பிற்குப் பிறகு கிம் தொடர்பான டிஎன்ஏவின் அனைத்து தடயங்களையும் அகற்றும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. பெய்ஜிங்கில் நடந்த பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பைத் தொடர்ந்து வட கொரிய மற்றும் ரஷ்ய தலைவர்கள் புதன்கிழமை சந்தித்தித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியான காணொளி ஒன்றில், வட கொரிய அதிகாரிகளின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிம் அமர்ந்திருந்த நாற்காலியை இரண்டு ஊழியர்கள் துரிதமாக துடைத்து சுத்தம் செய்வதும், ஒரு தட்டில் இருந்த குடிநீர் கிளாஸை எடுத்துச் செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இரு தலைவர்களும் தங்கள் சந்திப்பை முடித்து அறையில் இருந்து வெளியேறியதும், வட கொரிய தலைவரின் ஊழியர்கள் அனைத்து தடயங்களையும் கவனமாக அழித்துள்ளனர் என்றே ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவிற்கு பயம்
வட கொரிய ஊழியர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு கிம் உத்தரவிட்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ரஷ்ய மற்றும் சீன உளவுத்துறை தொடர்பில் வடகொரியாவிற்கு பயம் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
ஆனால், விளாடிமிர் புடின் வெளிநாட்டில் இருக்கும்போது அவரது மெய்க்காப்பாளர்கள் அவரது சிறுநீர் மற்றும் மலப் பொருட்களை சீல் வைக்கப்பட்ட பைகளில் சேகரித்து சிறப்பு சூட்கேஸ்களில் மாஸ்கோவிற்கு எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017 முதல் புடினின் ஃபெடரல் பாதுகாப்பு சேவை இதை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |