மெக்சிகோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திடீரென நடந்த துப்பாக்கி சூடு: 10 வீரர்கள் பலி
மெக்சிகோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திடீரென நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கார் பந்தயம்
மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டோ நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில், நேற்று கார் பந்தயம் நடைபெற்றது.
@ap
இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்று கொண்ட போது, இப்போட்டியை காண நூற்று கணக்கானோர் வந்திருந்தனர்.
இந்நிலையில் கார் பந்தயத்தின் போது, திடீரென சில மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த கும்பல் வேனிலிருந்து கார் பந்த வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது.
திடீரென துப்பாக்கி சூடு
இந்த துப்பாக்கி சூட்டில் கார் பந்த வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் குண்டு அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கார் பந்தயத்தில் ஈடுபட்ட 9 கார் பந்தய வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
@getty
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
@ap
இந்த நிலையில் இந்த திடீர் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என மெக்சிகோ காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் வென்சிட்டி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.