உலகின் மகிழ்ச்சியான நாடான நார்வேயின் வரலாறு
ஐரோப்பிய நாடான நார்வே உலகின் மகிழ்ச்சியான தேசமாக அறியப்படுகிறது.
இதற்கு காரணம் இந்நாட்டு மக்கள் எப்போதும் சண்டை சச்சரவுகளை விரும்புவதில்லை.
இங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையே தங்கள் இலக்காகக் கொண்டு வாழ்கிறார்கள்.
5.57 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நார்வேயில் நார்வேஜியன் மற்றும் சமி ஆகிய மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன.
வரலாறு
நார்வேயின் (Norway) வரலாறு அப்பகுதியின் நிலப்பரப்பு மற்றும் காலநிலையால் அசாதாரணமான அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
கி.மு.10,000யில் பெரும் பனிக்கட்டிகள் உள்நாட்டில் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ஆரம்பகால மக்கள் வடக்கே உள்ள நார்வேயில் குடியேறினர்.
ஆரம்பத்தில் வேட்டையாடுபவர்களாக இருந்த மக்கள் கடல் உணவையும் பிரதானமாக எடுத்துக் கொண்டனர். கி.மு.5,000 மற்றும் கி.மு.4,000க்கு இடையில் Oslofjordஐ சுற்றி ஆரம்பகால விவசாயக் குடியிருப்புகள் தோன்றின.
படிப்படியாக, கி.மு.1500 முதல் கி.மு.500 வரை விவசாயக் குடியிருப்புகள் முழு தெற்கு நார்வேயிலும் பரவியது. அதே சமயம் Trondelagயின் வடக்கே உள்ள பகுதியில் வசிப்பவர்கள் வேட்டையாடுவதையும், மீன்பிடிப்பதையும் தொடர்ந்தனர்.
8ஆம் நூற்றாண்டில் இருந்து நார்வே மக்கள் கடல் வழியாக பிரித்தானிய தீவுகள் மற்றும் பின்னர் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து வரை விரிவாக்கத் தொடங்கினர். மேலும் வைகிங் யுகமும் நாட்டை ஒன்றிணைத்தது.
தொழில்மயமாக்கல்
1523யில் ஸ்வீடன் யூனியனை விட்டு வெளியேறிய பிறகு, டென்மார்க்கில் நார்வே இளைய பார்ட்னர் ஆனது. பின்னர் 1537யில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1661யில் முழுமையான முடியாட்சி திணிக்கப்பட்டு, பின் 1814யில் டென்மார்க் உடனான நெப்போலியன் போர்களில் தோல்வியடைந்த பிறகு, Kiel உடன்படிக்கையின் மூலம் ஸ்வீடன் மன்னரிடம் நார்வே ஒப்படைக்கப்பட்டது.
பின்னாளில் நார்வே தனது சுதந்திரத்தை அறிவித்து அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. நார்வேயில் 1840களில் தொழில்மயமாக்கல் தொடங்கியது. மேலும் 1860களில் இருந்து வட அமெரிக்காவிற்கு பாரிய அளவிளான குடியேற்றம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து 1884ஆம் ஆண்டில் Johan Sverdrupஐ மன்னர் பிரதமராக நியமித்தார். கப்பல் போக்குவரத்தும், நீர்மின்சாரமும் நாட்டின் முக்கிய வருமான ஆதாரங்களாக இருந்தன.
உலகப்போர்
அடுத்த தசாப்தங்கள் ஏற்ற, இறக்கமான பொருளாதாரத்தையும் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியையும் கண்டன. உலகப்போர் இரண்டாம் உலகப்போரின் போது, ஜேர்மனி 1940 மற்றும் 1945க்கு இடையில் நார்வேயை ஆக்கிரமித்தது.
அதன் பிறகு நார்வே நேட்டோவில் சேர்ந்தது. 1969யில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1995யில் நார்வே உலகின் இரண்டாவது பாரிய ஏற்றுமதியாளராக இருந்தது.
இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பெரிதளவில் வளர்ந்தது. 1980களில் இருந்து நார்வே பல துறைகளில் கட்டுப்பாடுகளை நீக்க தொடங்கியது, பின்னர் 1989 - 1990 காலகட்டத்தில் வங்கி நெருக்கடியை நார்வே சந்தித்தது.
21ஆம் நூற்றாண்டில் நார்வே அதன் பொருளாதாரத்தில் 20 சதவீதம் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைக் கொண்டு உலகின் மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக மாறியது.
மேலும், அதன் எண்ணெய் வருவாயை மறு முதலீடு செய்வதன் மூலம், 2017ஆம் ஆண்டில் நார்வே உலகின் மிகப்பெரிய இறையாண்மை செல்வ நிதியைக் கொண்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |