உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவி: பிரித்தானியாவுடன் கைகோர்க்க இருக்கும் முக்கிய நாடு
பிரித்தானியாவுடன் இணைந்து நார்வே-யும் உக்ரைனுக்கு ஆயுதங்களை உதவியாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா உதவி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கி இருந்தது.
இதையடுத்து ஸ்ட்ரோம் ஷடோ நீண்ட தூர ஏவுகணைகளை(Storm Shadow long-range missiles) உக்ரைனுக்கு வழங்குவது என்பது போரின் நிலைமைகளை மேலும் தீவிரப்படுத்தும் என ரஷ்யா எச்சரித்தது.
மேலும் ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு தேவையான அனைத்து எதிர் நடவடிக்கையும் எடுக்க மாஸ்கோவுக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.
நார்வே உதவி
இந்நிலையில் பிரித்தானியாவுடன் இணைந்து உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க இருப்பதாக நார்வே தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பிரித்தானியாவுடன் இணைந்து, நார்வே 8 M270 ஏவுகணை அமைப்பு மற்றும் 3 ஆர்தர் பீரங்கி ரேடார்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
Norway, together with the UK, will transfer 8 M270 missile systems and 3 ARTHUR artillery-guided radars to Ukraine. pic.twitter.com/Idoam7r0WD
— NEXTA (@nexta_tv) May 18, 2023