பிறக்கும் 2025... பாபா வங்காவும் நாஸ்ட்ராடாமஸும் பதிவு செய்துள்ள ஒரே தீர்க்கதரிசனம்
பிறக்கவிருக்கும் 2025 தொடர்பில் பாபா வங்காவும் நாஸ்ட்ராடாமஸும் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனத்தை பதிவு செய்துள்ளது உலக மக்களின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.
ஒரேமாதிரியாக கணித்துள்ளது
உலகில் நடந்தேறவிருக்கும் பல சம்பவங்கள் தொடர்பில் இருவரும் தங்கள் கணிப்புகளை பதிவு செய்துள்ளனர். மனிதர்களுடன் வேற்றுகிரகவாசிகள் தொடர்பு கொள்ள இருப்பதையும், விளாடிமிர் புடினுக்கு எதிரான படுகொலை முயற்சி,
ஐரோப்பாவில் அதிகரிக்கவிருக்கும் பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் சார்லஸ் மன்னரின் ஆட்சி உள்ளிட்ட பல்வேறு தீர்க்கதரிசனங்களை இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள்.
உலகப் போர்களில் நெப்போலியனின் எழுச்சியைக் கணித்த நாஸ்ட்ராடாமஸ், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் குறித்து துல்லியமாக கணித்த பாபா வங்கா.
ஆனால் தற்போது பிறக்கவிருக்கும் 2025 தொடர்பில் இருவரும் ஒரேமாதிரியாக கணித்துள்ளது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2025ல் ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் ஒன்று வெடிக்கும் என்றே இருவரும் கணித்துள்ளனர்.
ஐரோப்பாவில் போர் வெடிக்கும் என குறிப்பிட்டுள்ள பாபா வங்கா, கண்டத்தின் மக்கள்தொகையை அது அழிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யா முந்தும் என்றும், அந்த நாடு உலகை ஆளும் என்றும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை உட்பட உலகம் முழுவதும் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும், பெரும்பாலானவை அவருடன் பழகியவர்களே நேரிடையாக பதிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
மோசமான கொள்ளைநோய் திரும்பும்
5079 ஆம் ஆண்டு வரையில் பாபா வங்கா தமது கணிப்புகளை பதிவு செய்து வைத்துள்ளார் என்றே கூறப்படுகிறது. 2025ல் நடக்கவிருக்கும் சம்பவங்களை பதிவு செய்துள்ள நாஸ்ட்ராடாமஸ்,
ஐரோப்பிய நிலப்பரப்பில் மிகக் கொடூரமான போர் வெடிக்கும் என்றும், கண்டத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிரிகளை அது உருவாக்கும் என்றும் பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி 2025ல் எதிர்பாராத போர் மற்றும் பிளேக் நோய்க்குப் பிறகு பிரித்தானியா சீரழியும் வாய்ப்புள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டவரான நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
மேலும், கடந்த காலத்திலிருந்து ஒரு மோசமான கொள்ளைநோய் திரும்பும், வானத்தின் கீழ் கொடியதாக எந்த எதிரியும் இருப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். சர்வவல்லமை பொருந்திய சில மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் 2025ல் சரிவடையும் என்றும்,
புதிய சக்திகள் உருவாகி உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். நீண்ட காலமாக தொடரும் போர்கள் முடிவுக்கு வரும், போர்க்களத்தால் இராணுவத்தினர் கடும் சோர்வுக்கு உள்ளாவார்கள் என்றும் 2025 தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |