ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் என செய்தி வெளியிட்ட பிரபல ஊடகங்களுக்கு நோட்டீஸ்
இந்தியாவின் அஹமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் என செய்தி வெளியிட்ட பிரபல ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல ஊடகங்களுக்கு நோட்டீஸ்
260 பேரின் உயிரை பலிவாங்கிய அஹமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் விமானிதான் காரணம் என வால்ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது, ராய்ச்சர்ஸ் பத்திரிகையும் அதேபோன்றதொரு செய்தியை வெளியிட்டது.
விமான எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லும் பொத்தான் அணைக்கப்பட்டதாகவும், ஒரு விமானி மற்றவரிடம் எஞ்சினுக்கு எரிபொருள் செல்லும் பொத்தானை ஏன் ஆஃப் செய்தாய் என கேட்க, நான் அதைச் செய்யவில்லை என மற்றவர் கூறியவதாகவும் விமான விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அலுவலர்களை மேற்கோள் காட்டி, வால்ஸ்ட்ரீட் பத்திரிகை, விமானத்தின் விமானிகளில் ஒருவர் எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லும் பொத்தானை வேண்டுமென்றே அணைத்ததாக செய்தி வெளியிட்டிருந்தது, ராய்ச்சர்ஸ் பத்திரிகையும் விமானி மீது குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால், விமான விபத்து தொடர்பான அறிக்கையில், விமானியின் தவறால் எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லும் பொத்தான் அணைக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ள The Federation of Indian Pilots (FIP) என்னும் அமைப்பு, அந்த இரண்டு பத்திரிகைகள் மேலும் தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறியுள்ளது.
அத்துடன், அந்த இரண்டு ஊடகங்களுக்கும் FIP அமைப்பின் சார்பில் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வால்ஸ்ட்ரீட் மற்றும் ராய்ச்சர்ஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றது என்றும், அவதூறைப் பரப்பும் நோக்கிலானது என்றும் கூறி, அந்த ஊடகங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |