இனி விண்வெளியிலும் திருமணம் செய்யலாம்! உற்சாகத்தில் இளம் ஜோடிகள்: 1 நபருக்கான கட்டணம் இவ்வளவா?
விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணும் ஜோடிகளின் கனவை நிறைவேற்றும் விதமாக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்ட்டிவ் என்ற நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
விண்வெளியில் திருமணம்
திருமணம் செய்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் தங்களது திருமணம் இவ்வாறு வித்தியாசமாக நடைபெற வேண்டும் என்ற கனவு இருக்கும்.
இவ்வாறு கனவு காணும் ஜோடிக்கு ஸ்பேஸ் பெர்ஸ்பெக்ட்டிவ் என்ற விண்வெளி நிறுவனம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி தந்து இருக்கிறது.
அது என்னவென்றால், வித்தியாசமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை தரையில் இருந்து 1 லட்சம் அடி உயரத்துக்கு அழைத்து சென்று, ஜோடிகளை விண்வெளியின் அழகை ரசிக்க வைத்தப்படி திருமணம் செய்து கொள்ள வைப்பது தான் அது.
இதற்காக அந்த நிறுவனம் அழகாக வடிவமைக்கப்பட்ட கொள்கலன் ஒன்றை கார்பன் நியூட்ரஸ் ராட்சத பலூனில் இணைத்து விண்வெளிக்கு அனுப்புகிறது.
பூமியில் இருந்து சரியாக 1 லட்சம் அடி உயரத்தை பலூன் எட்டியதும், திருமணம் செய்து கொள்வதற்காக பூமியில் இருந்து கிளம்பிய ஜோடி, விண்வெளியின் அழகை ரசித்து கொண்டு, திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் ஒன்றின் விலை
பலூனில் விமான ஓட்டுநர் ஒருவர் உட்பட 8 பேர் சேர்ந்து வசதியாக பறக்க அனுமதிக்கப்படும் நிலையில், ஒரு நபருக்கான டிக்கெட் விலை 1 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் 2024 முதல் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்ட்டிவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கிடையில் இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை 1000 பேர் வரை ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Twitter
Twitter