காதலனை மருத்துவ பணி செய்ய வைத்த செவிலியர்: வைரல் வீடியோவால் சர்ச்சை
சீனாவில் செவிலியர் ஒருவர் தன்னுடைய இரவு நேர பணியின் போது காதலரை மருத்துவ பணிகள் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலரை மருத்துவ பணி செய்ய வைத்த செவிலியர்
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் சிங்டே மூளை மற்றும் ரத்தநாள மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவர் தன்னுடைய இரவு நேர பணியின் போது காதலரை மருத்துவ பணிகள் செய்ய வைத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான காட்சிகளில் மருத்துவ பயிற்சி இல்லாத காதலர், நோயாளிகளின் மருத்துவ அறிக்கை எழுதுவது, மருத்துவ கணினிகளை செயல்படுத்துவது மற்றும் ஊசி மூலம் செலுத்தக்கூடிய முக்கிய மருந்துகளை தயார் செய்தல் ஆகியவற்றை செய்து வந்துள்ளார்.
மேலும் அந்த செவிலியர் தன்னுடைய “நைட் ஷிப்ட் நண்பன்” என்று குறிப்பிட்டு இந்த காட்சிகளை வெளியே பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த நபர், பல நாட்களில் வெவ்வேறு உடைகளில் மருத்துவமனையில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் கடும் கண்டனங்களையும் எதிர் கொண்டு வருகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட ஊழியர் மருத்துவ விதிமுறைகளை மீறியதற்காகவும், தொழில்முறை ஒழுக்கத்தை கடைபிடிக்காததற்கும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |