இந்தியா, பிரித்தானியா நல்லுறவு வலுப்பெறும்.. வாழ்த்துக்கள் ரிஷி சுனக்: தமிழக முன்னாள் முதல்வர்
ரிஷி சுனக்கிற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இந்தியா - பிரித்தானியா நல்லுறவு மேலும் வலுப்பெறும் என நம்புவதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரித்தானியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகினார். அதனைத் தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த அவர், தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.
ரிஷி சுனக்கிற்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரித்தானியாவின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியா - பிரித்தானியா நல்லுறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். நான் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.