சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
சமூக ஊடகங்கள், மொபைலில் அதிக நேரம் செலவிடுவதால் கணவன் அல்லது காதலனுக்கு ஏற்படும் சந்தேகம் கொலையில் முடியும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்ட இளம்பெண்
இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திலுள்ள Keonjhar என்னுமிடத்தைச் சேர்ந்த சஹாஜா அல்டா (26) என்னும் நபரும் அனிதா மக்காவுத் (21) என்னும் பெண்ணும் காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், மே மாதம் 11ஆம் திகதி அனிதா மாயமானார். அனிதாவின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கிய நிலையில், அவரது மொபைல் போனிலிருந்து சென்ற கடைசி அழைப்பு சஹாஜாவுக்கு என்பதை அறிந்த பொலிசார் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தீவிர விசாரணையில், தான் அனிதாவைக் கொன்று புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் சஹாஜா.
அனிதா சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டதாகவும், அதனால், அனிதா வேறு யாருடனோ தொடர்பிலிருப்பதாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அவரை பேச அழைப்பதுபோல் அழைத்து, கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் சஹாஜா.
நேற்று சஹாஜா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வனப்பகுதி ஒன்றில் அவர் புதைத்திருந்த அனிதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |