தற்காலிக பிணவறையான ஒடிசா பள்ளி- பேய் பயத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்; அரசு அதிரடி நடவடிக்கை
ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த பாடசாலைக்குள் நுழைய மாணவர்களும் ஆசிரியர்களும் மறுத்துவிட்டனர்.
தாற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட பாடசாலை
விபத்து நடந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோடல் உயர்நிலைப் பள்ளி, பஹானாகா, தற்காலிக பிணவறையாக செயல்பட்டு வந்தது. நூற்றுக்கணக்கான சடலங்கள் இங்கு குவிக்கப்பட்டன. பள்ளியின் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஒரு கூடம் இதற்காக பயன்படுத்தப்பட்டது.
தாற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட பாடசாலை சுத்தம் செய்யப்பட்டு ரத்தக்கறைகள் உட்பட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் நாட்டையே உலுக்கிய சோகத்தின் அதிர்ச்சி இன்னும் பலரிடம் இருந்து நீங்கவில்லை.
PTI
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 16-ம் திகதி வளாகம் திறக்கப்படவுள்ள நிலையில், பல மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே நுழைய மறுத்ததாக பள்ளி நிர்வாகக் குழு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தது.
இடித்துவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டித்தர கோரிக்கை
பள்ளியின் தலைமையாசிரியை பிரமிளா ஸ்வைன், இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும். பஹனகா மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள மக்கள் அவர்கள் மறக்கவே முடியாத பயங்கரமான காட்சிகளைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
பேய் நடமாட்டம் உள்ளதாக சில தரப்பில் இருந்து மூடநம்பிக்கைகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
PTI
'மூடநம்பிக்கையைப் பரப்ப வேண்டாம்'
இதனிடையே, பயத்தையும் மூடநம்பிக்கையையும்ப் பரப்ப வேண்டாம் என்று பாலசோர் ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே வேண்டுகோள் விடுத்தார். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
65 ஆண்டுகள் பழமையான பள்ளி இது. மேலும், இப்பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மூடநம்பிக்கையால் வழிநடத்தப்படக் கூடாது என்று ஷிண்டே கூறினார்.
PTI
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒடிசா அரசு
இந்நிலையில், பள்ளிம் கட்டிடம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டித்தரப்பட வைக்கப்பட்ட கோரிக்கையை ஒடிசா அரசு ஏற்றுக்கொண்டது.
இன்று நடந்த மெய்நிகர் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் முன்னிலையில் இடிக்கும் பணி தொடங்கியது. விரைவில் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு மூன்று மாதங்களில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO | Bahanaga High School, which was turned into a makeshift morgue following the train crash incident in Odisha's Balasore on June 2, is now being demolished. pic.twitter.com/ragmcklBNE
— Press Trust of India (@PTI_News) June 9, 2023