லட்சங்களில் ஊதியம்! இருப்பினும் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை: ஆட்சேர்ப்பு நிறுவனம் வேதனை
ஸ்காட்லாந்தில் லட்ச கணக்கில் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வருவதற்கு ஆட்கள் தயாராக இல்லை என்று ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று வேதனை தெரிவித்துள்ளது.
எண்ணெய் கிணறு தோண்டும் பணி
உலகின் பல்வேறு பகுதிகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கும் நிலையில், எவ்வளவு சம்பளம் தந்தாலும் சில வேலைகளுக்கு மட்டும் ஆட்கள் கிடைப்பதே இல்லை.
அந்தவகையில் ஸ்காட்லாந்தில் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே இல்லை என்று ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று வேதனை தெரிவித்துள்ளது.
அந்த வேலை என்னவென்றால், கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி, அதிலிருந்து எண்ணெய் மற்றும் இரசாயன வாயுக்கள் போன்ற பொருட்களை பத்திரமாக கரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே.
லட்சங்களில் சம்பளம்
இந்த வேலைக்கு மாதம் 4 லட்சம் வரை ஊதியம் தர சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாராக உள்ளது.
மேலும் 2 ஆண்டுகள் வேலை செய்தால் சம்பளத்தை 1 கோடியாக உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது, இருப்பினும் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனத்துக்கு போதுமான ஆட்கள் கிடைப்பது இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளது.
stock