வருமான வரியை அறிமுகப்படுத்தும் முதல் வளைகுடா நாடு - யாருக்கெல்லாம் வரி?
வருமான வரியை அறிமுகப்படுத்தும் முதல் வளைகுடா நாடாக ஓமன் உருவெடுத்துள்ளது.
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளும் GCC (Gulf Cooperation Council) நாடுகள் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், GCC நாடுகளில் வருமான வரியை அமுல்படுத்தும் முதல் நாடாக ஓமன் மாறியுள்ளது.
ஓமனில் வருமான வரி
2028 ஆம் ஆண்டு முதல் வருமான வரியை அமுல்படுத்த உள்ளதாக ஓமன் அறிவித்துள்ளது.
42,000 ரியால்(இந்திய மதிப்பில் ரூ.9.63 லட்சம்) அதிகமாக வருமானம் ஈடுப்பவர்களிடம் 5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டில், அதிக வருமானம் ஈட்டும் முதல் 1% பேரை பாதிக்கும் என கூறப்படுகிறது.
சமூக செலவினங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், எண்ணெய் வருவாயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என ஓமன் பொருளாதார அமைச்சர் சையத் பின் முகமது அல்-சக்ரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய தேவை குறைந்து வரும் நிலையில், GCC நாடுகள் வருமான வரியை அமுல்படுத்த வேண்டியிருக்கும் என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |