ஹார்மோஸில் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டம் - எதிர்க்கும் முக்கிய நாடு
ஹார்மோஸில் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டதிற்கு ஓமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹார்மோஸில் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த ஓர் இன்று முதல் 2 வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் 10 கோரிக்கைகளை ஏற்று டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
தற்போது ஹார்மோஸ் நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டாலும், 10 அம்ச கோரிக்கைகளில் ஹார்மோஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிடம் தான் இருக்கும் என தெரிவித்திருந்தது.

மேலும், ஹார்மோஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களிடம் 2 மில்லியன் டொலர் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தையும் ஈரான் வைத்திருந்தது.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, போருக்கு பின்னர் நாட்டை புனரமைக்க பயன்படுத்த உள்ளது.
பாகிஸ்தானில் வைத்து ஏப்ரல் 10 ஆம் திகதி ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அதன் பின்னரே ஈரான் ஹார்மோஸ் நீரிணையை திறக்க உள்ளது.
ஓமன் எதிர்ப்பு
இந்நிலையில், ஹார்மோஸ் நீரிணையில் எந்த கப்பல்களிடமும் கட்டணம் வசூலிக்க கூடாது என ஓமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹார்மோஸ் நீரிணை பரப்பை ஈரான் மற்றும் ஓமன் பகிர்ந்து வரும் நிலையில், கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு முக்கிய நாடான ஓமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

171 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடல் சட்ட ஒப்பந்தம், ஹோர்முஸ் போன்ற முக்கிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்திற்கான உத்தரவாதங்கள் வழங்குவதோடு, கடந்து செல்லும் கப்பல்களிடம் சுங்கம் வசூலிப்பது போன்ற தலையீடுகளை தடை செய்கிறது.
ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
10 அம்ச போர் நிறுத்த கோரிக்கைகளில், ஈரானின் கூட்டாளிகள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரான் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு அதன் பிராந்திய நீர் எல்லையை பகிரும் முக்கிய நாடான ஓமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |